கனியவள தொழிற்சங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

240

பொதுமக்களின் நலன்கருதி போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு போராட்டத்தில் ஈடுபடும் கனியவள தொழிற்சங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கனிய எண்ணெய்வள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், சேவைக்கு திரும்பாத பணியாளர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE