கமலின் 3 படங்கள் ரிலீஸ் எப்போது? 

380


‘விஸ்வரூபம் 2‘, ‘உத்தம வில்லன்‘, ‘பாபநாசம்‘ என 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் கமல். அவரது ரசிகர்களுக்கு வரும் ஆண்டு ஜாக்பாட் ஆண்டாக இருக்கும். இந்த மூன்றில் அடுத்து ஆண்டில் முதலில் ரிலீஸ் ஆகப்போகும் படம் எது என்பதும் இன்னும் முடிவாகவில்லை. இது பற்றி கோலிவுட்டில் விசாரித்தபோது கிடைத்த தகவல்:இப்போதுள்ள சூழலில் முதலில் உத்தவில்லன், அடுத்து விஸ்வரூபம் 2 பிறகு பாபநாசம் வெளிவரும் என்று தெரிகிறது. பாபநாசம் படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்த நிலையில் இன்னும் ஒரு பகுதி வேலை பாக்கி இருக்கிறது. எனவே பாபாநாசம் படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது. உத்தம வில்லன் ரிலீஸ் தேதி இறுதி செய்யப்பட்டால்தான் மற்ற 2 படங்களின் வெளியீடு பற்றி தெரியவரும். உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அதற்கும் இறுதிகட்ட பணிகள்தான் நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தை இம்மாதம் (டிசம்பர்) ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக உத்தம வில்லன் தள்ளி வைக்கப்பட்டது. இப்படம் ஜனவரியில் வரும் என்று கூறப்பட்டாலும் இன்னும் தேதி முடிவாகவில்லை. இப்படத்தின் ரிலீஸ் முடிவான பிறகே விஸ்வரூபம் 2, பாபநாசம் படங்களின் ரிலீஸும் முடிவாகும் என தெரிகிறது.

SHARE