கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்டனர்- கேணல் ஹரிஹரன்

731
hariharan

muralitharan460இந்திய அமைதிப் படையினர் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய அமைதிப் படையினர் புலனாய்வு பிரிவு தலைவர் கேணல் ரமணி ஹரிஹரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயார். எனினும் ஏன் இந்தப்பிரச்சினை தற்போது எழுந்துள்ளது என்று ஹரிஹரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்டனர்.

600 பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டமைக்கும் கருணாவே தலைமை தாங்கினார்.

Kattandakudi07 LTTE Kattankudi Muslim Mosque Massare 20

எனவே அது தொடர்பான விசாரணைகளுக்கு கருணா ஒத்துழைப்பு வழங்குவார் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்.

கருணா தற்போது கூறியுள்ள இந்தக்குற்றச்சாட்டு பெரும்பாலும் அரசியலுடன் தொடர்புடையது என்றே தாம் கருதுவதாக ஹரிஹரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருணா முற்றாக மக்களால் நிராகரிக்கப்படுவார்.

இந்தநிலையில் தம்மை தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வதற்காகவே கருணா இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் கருணா விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கும் இலங்கைப் படையினர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் விசாரணைகளை கோருவாரா? என்று ஹரிஹரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

SHARE