கருணா-பிரபா பிளவுக்கு காரணமாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க

341

விடுதலைப்புலிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தினை சென்றிருந்தநிலையில், அப்போராட்டத்தினை அமெரிக்க அரசுடன் இணைந்து சிதைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டமையை யாவரும் அறிந்ததே. போரியல் வரலாற்றில் கெரில்லா, வலிந்த தாக்குதல், முற்றுகை என்று முப்படைத்தாக்குதல்களையும் திறம்பட நகர்த்தும் திறன் வாய்ந்தவர் கருணா அம்மான். அவ்வாறாக தமிழீழத் தேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்டுவந்தார்.

தற்பொழுது இருக்கக்கூடிய கே.பியும், கருணாவும் இந்த அரசிற்கும் தேவைப்பட்டவர்களே. விடுதலைப்புலிகளை இறுதியாக காட்டிக்கொடுத்ததன் ஊடாக இன்று தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை சிதைக்கப்பட்டு, ஒரு கூட்டாட்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால், சமாதான காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை சுக்குநூறாக உடைத்த அதே ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும், அதன் கட்டுமாணங்களையும் பிளவுபடுத்துவதற்கும், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இரண்டினையும் மறந்துசெயற்படுவதற்குமான வழிகளை இலகுபடுத்தி வருகின்றார். ஆகவே இந்த குள்ளநரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்வது அவசியமாகும்.

SHARE