கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார்.

424

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜெயசூரிய போட்டியிடுவார் என்று தகவல் ஒன்று கடந்த வாரத்தில் வெளியானது.

இதனையடுத்தே ஜனாதிபதி தொலைபேசி மூலம் ஜெயசூரியவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

“மங் ஒபதுமான்ட சுபபத்தனவா” ( நான் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன்)  என்று ஜனாதிபதி கூறியபோது பதிலளித்த கரு ஜெயசூரியää “ஏக்க பக்சேய் தமா தீரனயக்கரான்னே” (அதனை கட்சியே தீர்மானிக்கும்) என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரில் ஒருவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

SHARE