கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கு பொதி வழங்கும் திட்டம் 21ம் திகதி ஆரம்பம்

402
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக கூறிய போஷாக்கு பொதி வழங்கும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி பொலன்நறுவையில் ஆரம்பிக்கப்படும் என சிறுவர் விவகார அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானித்திருந்த தொகையை 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போஷாக்கு பொதி வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்கள் முதலும், குழந்தை பிறந்த பின்னர் ஆறுமாதங்களுக்கும் இப்போஷாக்குப் பொதி வழங்கப்படவுள்ளது. இதேவேளை போஷாக்கு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய பிரதேச சபை சுகாதார காரியாலயத்தினூடாக இப்போஷாக்கு பொதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE