கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

338

ஓமந்தை நாவற்குளம், மருதோடை, மருதங்குளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதோடை அ.த.க.பாடசாலையில் 10.02.2015 அன்று முன்னைநாள் கூட்டுறவு பரிசோதகரும், ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்க தலைவருமான திரு.சிவசேகரம் தலைமையில் நடைபெற்றது.

நொச்சிக்குளம் சிறீசித்தி விநாயகர் ஆலய செயலாளர் குமாரசாமி இராஜேந்திரகுமார் ஒழுங்கமைப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ரி.ஆர்.ரி வானொலியின் நிதி உதவியுடன் இக்கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

ஓமந்தை பிரதேச கிராம-மாதர் அபிவிருத்திச்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

unnamed (1)   unnamed

 

SHARE