கலப்பு முறை தேர்தலே இலங்கையில் அறிமுகம்?

276
நியூஸிலாந்தில் நடைமுறையில் உள்ள கலப்பு தேர்தல் முறையையே இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையிலேயே 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையின்படி நாடு முழுவதும் பெறப்படும் முடிவுகளுக்கு அமைய விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.  அத்துடன் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வகையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இந்தமுறையின் மூலம் வன்முறைக்கு வழிவகுக்கும் விருப்புத்தெரிவு வாக்குமுறையை 34 வருடங்களுக்கு பின்னர் அகற்றிவிடமுடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இதன்படி 250 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

SHARE