கலைஞர் ஜயதிலக்க பண்டார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

400

 

அம்பாந்தோட்டையில் வீதியின் எதிர்ப்பு அமைப்பின் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலைஞரான ஜயதிலக்க பண்டார ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்படும் ஆபத்தை கவனத்தில் கொண்டு அவர் மாத்தறைக்கு மாற்றப்பட்டார் என வீதியின் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை வீதியின் எதிர்ப்பு அமைப்புக்கு எதிராக அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

15 பேர் துப்பாக்கிகளுடன் வந்து மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

SHARE