கல்பிட்டி கந்தல்காடு பகுதியில் அமைந்துள்ள விமானப்படை முகாமிலேயே குறித்த மர்ம வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தில் உடல் கருகிய நிலையில் காயமுற்ற மூன்று விமானப்படையினர் தற்போது கல்பிட்டி மற்றும் புத்தளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் இராணுவம் மற்றும் பொலிசாரினால் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளபோதும் கடற்படை தளபதியின் இந்திய விஜயம் திட்டமிட்டப்படி இடம்பெறும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த பயணம் எதிர்வரும் 25ஆம் திகதியன்று இடம்பெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை கடற்படையின் தளபதியின் பயணத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது எனினும் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கடற்படை தளபதி இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொள்வார் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.