கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு

423

கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம்.ரியாஸ்க்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸே காயமடைந்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிஸ் காங்கிரஸை கண்டித்து உரையாற்றியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அடிதடி

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வானது இன்று மாலை மாநகரமுதல்வர் நிசாம் காரியப்பர் தலமையில் ஆரம்பமானது.

இதன்போது ஐ .மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம.றியாஸ் வீதிக்கு பெயர் வைப்பது தொடர்பான கருத்தினை முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அதனை ஏற்க மறுத்த மாநகர முதல்வர் அப்படியானவற்றை செய்யமுடியாது எனக்கூறியபோதே வாய்த்தர்க்கம் அதிகரிக்க ஆரம்பமானது.

பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம்கட்சியின் உறுப்பினர்களுக்கும் றியாஸிக்கும் இடையே கைகலப்பு மிகவும் உக்கிரமாக தொடர்ந்து கொண்டிருக்கும்போதே தனது ஆசனத்தினை தூக்கி ஆளும் தரப்பினருக்கு வீசியபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.பிரதௌஸஸின் தலையில் பட்டதுடன் அவரது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

அதன்பின்னர் அங்கு நின்றவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவரை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

 

SHARE