கவர்ச்சி காட்லனாலும் ஹீரோயினுக்கு மவுசுதான்: சுவாதி நறுக் 

404
கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்து கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். இப்போதுள்ள போட்டியில் கவர்ச்சி காட்டாவிட்டால் நிலைக்க முடியாது என்று அவருக்கு சிலர் அட்வைஸ் செய்தனர்.

 

இதுகுறித்து அவர் கூறியது:நடிப்பு என்றதும் கவர்ச்சி உடை அணிந்து நடிப்பது முக்கியம் என்று சிலர் அட்வைஸ் செய்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை. அதுபோல் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. நான் ஏற்கவில்லை. இயக்குனர்கள் கவர்ச்சியை மட்டும் நம்புவதில்லை என்பது ஏற்கனவே பல படங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே நான் அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்தேன். நல்ல வேடங்கள் என்னை தேடி வந்தன. தமிழில் எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அது என் பெயர் சொல்லும் பாத்திரங்களாக அமைந்தன.

 

விரைவில் ஜெய் ஜோடியாக நடித்துள்ள வடகறி திரைக்கு வரவுள்ளது. இதில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்பவராக நடிக்கிறேன். இதுதவிர மலையாளத்தில் ஆமென், நார்த் 24 காதம் மற்றும் முசயிலே குதிர மீனுகள் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றத்தந்ததுடன் வெற்றிபடங்களாக அமைந்தது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்போதைக்கு செல்லும் பாதை நன்றாகவே இருக்கிறது. விரைவில் புதிய படங்களை ஏற்க உள்ளேன்

 

SHARE