கவுண்டமணி பத்திரிக்கைகளில் தலைகாட்டாதது இதனால் தான்?

363

 தமிழ் சினிமாவில் என்றும் நகைச்சுவை கிங் என்றால் கவுண்டமணி தான். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து வெளிவந்த படம் 49 ஒ.

தன் வாழ்கையில் இவர் கலந்துக்கொண்ட முதல் இசை வெளியீட்டு விழா இந்த படம் தான் என கூறப்பட்டது. மேலும், எல்லோரும் நிகழ்ச்சியில் நீண்ட நேரம் பேச, கவுண்டமணி மட்டும் சில நிமிடம் மட்டுமே பேசி கிளம்பினார்.

மேலும், இவர் பெரும்பாலும் எந்த பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுப்பதே இல்லை, ஏனெனில் இவர் யாருடனும் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டாராம், அப்படி இவர் தனிப்பட்ட முறையில் எடுத்த ஒரு புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் போட்டார்களாம்.

அன்றிலிருந்தே எந்த பத்திரிக்கைகளுக்கும் இவர் பேட்டி கொடுப்பது இல்லை என்று முடிவெடுத்தாராம்.

SHARE