காங்கோ நாட்டில் நிலநடுக்கம்

168
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. அது, தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவு நகருக்கு அருகேயுள்ள லேக் டங்கன்யிகாவை மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். அவர்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நில நடுக்கத்தால் ஒரு வீடு இடிந்து விழுந்து, அதன் இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பல்வேறு இடங்களில் கட்டிடங்களில் பெரிய அளவு கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கோ நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் லாம்பர்ட் மென்டே கூறினார்.

SHARE