காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

388

 

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். இந்த ஆணைக் குழுவில் ஏற்கனவே மூன்று உறுப்பினர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய நியமனம் காரணமாக ஐந்து ஆணையாளர்களும் ஐந்து இடங்களில் இருந்தவாறு விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

lost people missing-1

SHARE