காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கை

355

 

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக அதன் செயலாளர் ஹோ வாசலகே குணதாச தெரிவித்துள்ளார்.

SAM_8871-600x450 vikatan30-01
ananthi-123

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி அறிக்கையை வெளியிட ஜனாதிபதி ஆணைக்குழு எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி நியமித்த வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆணைக்குழுவின் பணிகளை செம்மையாக மேற்கொள்ள ஆணையாளர்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து 5 ஆக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குணதாச குறிப்பிட்டுள்ளார்.

SHARE