நாம் ஒரு முடிவெடுத்தால் ஆளுநர் ஒரு முடிவெடுக்கின்றார் – சி.வி.விக்னேஸ்வரன்

602

 

கடந்த வாரம் கூட இரு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வடபகுதியில் நடைபெறுகின்றது. இதனால் மக்கள் பய உணர்வுடன் வாழ்கின்றனர். இவ்வாறு இராணுவம் இருக்கக்கூடிய வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்செல்ல முடியாதிருக்கின்றது. காணரம் இருக்கின்ற காணிகளில் இராணுவம் வெளியேற மறுக்கின்றனர்.

மூன்று பொதுமகனுக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் இப்பகுதியில் இருக்கின்றனர். இது தொடர்பில் மாற்றத்தினைக் கொண்டுவரும் படி ஆளுநர் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர் அனுமதி தரவில்லை.
ஆடிப்படையே தடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டத்தை நாம் எவ்வாறு முன்னெடுப்பது. கிழக்கு மாகாண அலுவலகத்தில் பணியாளர்கள் கடமையாற்றினார்கள். பின்னர் சட்டத்திற்கமைய வடகிழக்கை இணைத்து ஒன்றாக செயற்படவேண்டுமென்று சட்டம் கூறியபோதிலும் உச்ச நீதிமன்றம் வடகிழக்கை பிரிப்பதாக முடிவெடுத்தது.

அதன் பிறகு ஏற்கனவே கிழக்கில் பணியாற்றியவர்கள் வடக்கிற்கு அனுப்ப்பட்டார்கள். ஏற்கனவே கிழக்கில் பணியாற்றியவர்கள் அப்பகுதியிலேயே பணியாற்ற விரும்பினார்கள் ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மாறாக வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையிலிருந்து ஏற்றிச்செல்லப்படுவார்கள். பின்னர் பணிகளுக்காக திங்கட்கிழமை காலை திருகோணமலைக்கு ஏற்றிவருவார்கள். இதற்கு கொடுப்பனவாக 170.00 மாத்திரமே வழங்கப்பட்டது.

திடீரென்று இந்தத்தொகையை 300.00 வாக அதிகரித்தார்கள். இதிலொரு விடயம் மாகாணசபை அமைச்சரவை இத்தொகையை அதிகரிக்கவேண்டாம் எனக் கூறினார்கள். இருந்தபோதும் ஆளுநரின் செயலாளர் இத்தொகையை சட்டபூர்வமாக கொடுப்பதற்கு அனுமதி வழங்கிவிட்டார் என்பதேயாகும். பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் உங்களது நிலைமை எனக்குப் புரிகிறது. இராணுவத்தை இப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நினைத்தவுடன் மேற்கொள்ளமுடியாது. குறிப்பிட்ட கால எல்லைக்குள் உங்களுக்கான காணிகளுள் சுதந்திரமாக வாழ வழியமைத்துத்தருவோம். பொதுமக்கள் முதலமைச்சர் முன் கண்ணீர் மல்கதமதுஅடிப்படை விடயங்களை எடுத்துரைப்பதனையும் காணலாம்.

தமிழில் தினப்புயல்.

SHARE