ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு இளைஞர்களின் கனவுக் கன்னி என்றால் அது நித்யா மேனன் தான். நித்யா மேனன் இயக்குனர்களை மதிப்பது இல்லை என்றும் மற்றவர்களிடம் கோபத்தில் எரிந்து விழுகிறார் என்றும் காதலில் சிக்கியுள்ளார் என்றும் பல நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றி கூறிய நித்யா மேனன், நான் இயக்குனர்களை மதிப்பவள், யாரிடமும் கோபப்பட மாட்டேன்.
எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்தபோது காதலித்தேன். ஆனால் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாக சந்தோஷமாக இருக்கிறேன்.
என் கேரக்டர் சிறப்பாக வர முழு உழைப்பையும் கொடுப்பேன். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.