காதல் முறிவு எனது சொந்த விஷயம் – வெடிக்கிறார் சமந்தா 

365

 

சித்தார்த் – சமந்தா தங்களது 2 வருட காதலை திடீரென்று முறித்துக்கொண்டனர். சித்தார்த்துடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் இந்த முறிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இருவரும் பிரிந்தது ஏன்? என்று சமந்தாவிடம் கேட்டபோது அவர் கோபம் அடைந்தார். ‘நான் பெரும்பாதிப்புக்கு ஆளானதுபோல் இதையே எல்லோரும் கேட்கிறார்கள். நான் பாதிக்கப்படவில்லை. சித்தார்த் நல்லவர். மீடியாக்கள் இதுபோல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய சொந்த விஷயம். அதனால் போதும் நிறுத்துங்கள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது. ‘இது பற்றி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என ஒரேவார்த்தையில் பதிலை முடித்துக்கொண்டார். இது தொடர்பாக சித்தார்த் மவுனம் காத்து வருகிறார்.

இதற்கிடையில் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த்-சமந்தா நடிப்பதாக இருந்தது. காதல் முறிவையடுத்து இருவரும் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் பட தரப்பில் கூறும்போது, ‘சித்தார்த்-சமந்தா இருவருமே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே ஒருவருடன் ஒருவர் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். ஆனால் இப்படத்தில் இருவரும் நடிப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருவரும் சேர்ந்து நடிப்பார்கள். திட்டமிட்டபடி மார்ச் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சமந்தா இனி முழு வீச்சில் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்’ என்றனர்

 

SHARE