காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “மக்கள் அழுத்தப் போராட்டம்” ஒன்றினை இன்று நடத்தியது.

392

 

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “மக்கள் அழுத்தப் போராட்டம்” ஒன்றினை இன்று நடத்தியது. காத்தான்குடி நகரசபை முன்பாக இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த மக்கள் அழுத்தப் போராட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எஸ்.எச்பிர்தௌஸ், எம்.ஏ.எச்.எம்.மிஹ்ழார் மற்றும் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க், எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) உள்ளிட்ட பிராந்திய சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல தலைவர் முஹம்மது ஷிப்லி மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஐ.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

image_handle (1) image_handle

SHARE