காத்திருக்கும் விஜய் ஆண்டனி

304

இசையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சலீம்’ படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் வெளியான இப்படத்தில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். இப்படமும் எதிர்பார்த்தளவிற்கு நன்றாகவே ஓடியது. இதைத்தொடர்ந்து ‘இந்தியா பாகிஸ்தான்’ என்னும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த விஜய் ஆண்டனி, 2 மணி நேரம் 37 நிமிடங்கள் படத்தின் நீளம் என்றும், இப்படம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.

புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

SHARE