காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா

403
காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21 வயதான சந்தேலா 206.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அயோனிகா பால் 204.9 புள்ளிகள் பெற்று இரண்டாவதாக வந்தார்.

இன்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. இத்துடன் சேர்த்து இந்தியா இதுவரை 13 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது. 13 தங்கம் உள்ளிட்ட 35 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

SHARE