காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய கும்பல்!

452

 

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக ஷகிருல்லா மர்வாடை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீதிபதி ஷகிருல்லா மர்வட் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல் காரை வழிமறித்து நீதிபதியை கடத்தி சென்றது.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டம் பக்வால் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.நீதிபதி கார் சாரதியை அந்த கும்பல் ஒன்றும் செய்யவில்லை. நீதிபதி கடத்தப்பட்டதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடத்தப்பட்ட நீதிபதியை பாதுகாப்பாக மீட்க மாகாண முதல்வர் கந்தாபூர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

மார்வாட்டின் மீட்புக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

SHARE