கார் முழுவதும் ஏறி இறங்கியும் 3 வயது சிறுமி உயிர் பிழைத்த அதிசயம் (வீடியோ இணைப்பு)

204
மகாராஷ்டிராவில் சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி மீது கார் ஒன்று ஏறி இறங்கியும், அந்த குழந்தை சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
நாசிக்கில் கடந்த யூன் மாதம் 18ம் திகதி, வீட்டில் இருந்த 3 வயது சிறுமி ஜோயா, திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையைக் கடக்க முயன்றாள்.ஆனால், அப்போது அங்கே வந்த கார் ஒன்று எதிர்பாரா விதமாக அவள் மீது, ஏறி இறங்கியது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒரு பெண்மணி ஓடிச் சென்று சிறுமியைத் தூக்கிக் காப்பாற்றினார்.

மேலும், உடனடியாக அந்த காரிலேயே சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் கார் முழுவதும் குழந்தை மீது ஏறி இறங்கியும் குழந்தை அதிஷ்டவசமாக பிழைத்து கொண்டதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் அந்த சிறுமிக்கு சிறிது உள்காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

 

SHARE