கால்பந்தில் மரடோனா தாத்தாவையே ஓரங்கட்டிய பேரன்

363
அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா, தனது பேரனுடன் கால்பந்து விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.கால்பந்தில் ஜாம்பவானாக வலம் வந்த மரடோனாவுக்கு தற்போது 55 வயதாகிறது. இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.

இளைய மகளின் மகன் பெஞ்சமின் கால்பந்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். அதனால் அந்த பேரன் மீது மரடோனாவுக்கு அலாதி பிரியம். இருவரும் மாலை நேரங்களில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் தாத்தா அடித்த பந்தை, கோல் போஸ்டில் இருந்து அசத்தலாக தடுத்த பேரன் பெஞ்சமின், அவரிடம் இருந்து பந்தை லாவகமாக தட்டிச் சென்று கோல் போடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதை மரடோனா வெளியிட்டுள்ளார்.

SHARE