கால்பந்து வீரர் பெல்ஜியம் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம்

357
கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, பெல்ஜியம் வீரர் டிம் நிகாட்  உயிரிழந்துள்ளார்.பெல்ஜியம் கால்பந்து அணியைச் சேர்ந்த 23 வயதான டிம் நிகாட் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ம் ஹெமிக்செம் என்ற இடத்தில் நடந்த உள்ளூர் போட்டியில்  வில்ரிஜ்க் அணிக்காக டிம் நிகாட்  விளையாடினார்.

அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மயங்கி சரிந்தார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த மே 1ம் திகதியும் பெல்ஜியம் வீரர் கிரிகரி மார்டென்ஸ், 24, ஜென்க் அணிக்கு எதிராக விளையாடிய போது, மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

தற்போது மீண்டும் இளம் வீரர் மரணம் அடைந்தது, பெல்ஜியம் கால்பந்து அரங்கில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

SHARE