கிணறுகளில் கழிவு ஒயில் கலந்து குடிதண்ணீர் மாசடைந்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் பத்து நிமிடங்கள் வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பாடசாலை முடிந்து வெளியேறிய மாணவர்களும் ஆசிரியர்களுமே வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.