கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!!

120

முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழி்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டது.

குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள்.

சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை விட்ட போது சிறுமி வாளியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சிறுமிக்கு எதுவித காயங்களும் இல்லாதும் சிறுமி பயமேதும் இல்லாதும் இருந்த போது இது தொடர்பாக சிறுமியை அயலவர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமி கிணற்றினுள் பிள்ளையாரும் ஒரு அம்மாவும் தன்னை பயப்பட வேண்டாம் என்று கூறி தூக்கி வைத்திருந்ததாகவும் இனிமேல் இவ்வாறு கிணற்றுப் பக்கம் வரவேண்டாம் எனச் சொன்னதாகவும் கூறியுள்ளாள்.

இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்து காட்டாறு விநாயகரினதும், வற்றாப்பளை அம்மனுடையதும் புதுமை இந்தச் சிறுமிணைக் காப்பாற்றியுள்ளது எனக் கூறுகின்றனர்.

SHARE