கிரிக்கெட் மைதானங்களில் சங்கக்காராவை இழக்கிறோம்: பாராட்டு தெரிவித்த மோடி

313

கிரிக்கெட் மைதானங்களில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவை தாம் இழப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் முடிந்த இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான நட்புறவை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவை கிரிக்கெட் மைதானங்களில் தாம் இழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டியோடு 15 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் சங்கக்காரா.

SHARE