கிறிஸ்டியானோ ரொனால்டோ 300 கோல்களை அடித்து அசத்தி உள்ளார்.

370
ரியல் மாட்ரிட் அணிக்காக 300வது கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.ஸ்பெயினில் லா லீகா கால்பந்து தொடர் நடக்கிறது. மாட்ரிடில் நடந்த இதன் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், ராயோ வாலேகேனோ அணிகள் நேற்று மோதின.

இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு, போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (68வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (73) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

இதற்கு, எதிரணியால் எவ்வித பதிலடியும் தர முடியவில்லை. முடிவில், ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ தனது 300வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம், ரியல் மாட்ரிட் அணிக்காக இந்த இலக்கை எட்டிய, மூன்றாவது வீரரானார்.

முதலிரண்டு இடங்களில் ஸ்பெயினின் ரால் (323), அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிக்காக விளையாடிய அல்பர்டோ ஸ்டெபனோ (308) உள்ளனர்

SHARE