கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.

312

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் சிக்கினர் என்று தெரியவருகிறது

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில், புகையிரதத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புகையிரதத்துடன், கார் மோதியதில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் நால்வரும் களுத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE