கிழக்கில் கோபியின் தில்லாலங்கடி அட்டகாசம்…..

145

கிழக்குப் பல்கலைக் கழக முன்னால் உபவேந்தர் கலாநிதி க.கோபிந்தராஜா பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரிற்கான பதவி வெற்றாகியிருந்தது.

east_university

ஆனாலும் இவரை தொடர்ச்சியாக பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் சில தரப்பு முனைந்து வந்தன அதனையும் கருத்தில் எடுக்காத உயர் கல்வி அமைச்சு பதவி நீடிப்பு வழங்க வில்லை இதனை ஏற்க மறுத்த நிலையில் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினார் முன்னால் உப வேந்தர் கோபிந்தராஜா.

வெளியேறிய நாட்களில் இருந்து கிழக்குப் பல்களைக் களகத்தை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வில்லை மாறாக சிக்கல்கள் கொடுத்த வண்ணமே இருந்துள்ளார்.

தற்போதைய துண்டுப் பிரசுரமும் இவரின் ஏற்பாடு எனக் குறிப்பிடும் மாணவர்கள் முன்னால் உப வேந்தர் கோபியின் பதவியை தக்க வைப்பதில் அரும் பாடு பட்ட மட்டக்களப்பு ஒரு ஊடகவியலாளர் தற்போதைய குழப்பத்தின் பின்னனியிலும் இயங்குவது நிரூபனமாகியுள்ளது.

இவ் ஊடகவியலாளர் கோபியின் பல தில்லாலங்கடி வேலைகளை மறைப்பதில் முன்னின்று உழைத்ததுடன் கிழக்கு கல்வியை விட கோபியின் பதவிக்காக இரவு பகலாக உழைத்தவர் கோபியின் வழிநடத்தல் இன்றைய கிழக்குப் பல்கலைக் களகத்தின் குழப்பத்தின் பின்னனியில் இவ் ஊடகவியலாளர் இருப்பதாக எமக்கு இனுப்பியுள்ள மின்னஞ்சலில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தற்போது நிலவிவரும் அநாமதேய துண்டுப் பிரசுர மொட்டைக் கடதாசி கலாச்சாரத்தை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரீ.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி பேராசியை உமா குமாரசாமியை தொடர்புபடுத்தி தற்போது வெளியாகி இருக்கும் அநாமதேய துண்டுபிரசுரம் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அண்மைக் காலமாக நிலவிவரும் இந்த மொட்டைக் கடதாசி கலாச்சாரமானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். கடந்த மூன்று வருடங்களாக கொடுக்கப்படாமல் இருந்த கலாநிதிப் பட்டங்கள், தடுக்கப்பட்டிருந்த பதவி உயர்வுகள், போன்ற பல பிரச்சினைகளுக்கு உமா குமாரசாமி கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர்; தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறாக சிறந்த நிர்வாகத்தை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றமை பெருமையடைய வேண்டிய விடயமாகும். அத்துடன், தற்சமயம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நல்ல மாற்றத்தை நாங்கள் வெகுவாக வரவேற்பதோடு இது தொடர வேண்டும் என்றும் அவாக் கொண்டுள்ளோம்.

எனவே, இத்தகைய ஒரு சிறப்பான நிருவாகக் காலகட்டத்தில் பிழையான வழிமுறைகளைக் கையாண்டு தங்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை அனுபவித்துக் கொள்ள நினைக்கின்றவர்கள் அவை கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக வீணாக பழி சுமத்த முயற்சிக்கின்றனர். அதன் பிரதிபலிப்புக்களே இந்த மொட்டைக் கடிதங்கள்.

எனவே, இது ஒரு உயர் கல்வி நிறுவனம் என்கின்ற வகையில் இந்த அநாமயதேய மொட்டைக் கடிதக் கலாச்சாரத்தை தவிர்ந்து கொள்வதே சிறந்தது. இது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒரு வெட்கித் தலைகுனிய வேண்டிய கலாச்சாரமாக இருந்து வருகின்றது. தங்களுக்குள்ள பிரச்சினைகளை நேரடியாகக் கலந்து பேசித் தீர்த்துக் கொள்வதே நாகரீகமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

SHARE