கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்­கின்­றன.

706

 

e0ae95e0af81e0aeb0e0ae99e0af8de0ae95e0af81e0aeaee0af8d-e0ae85e0aeaae0af8de0aeaae0aeaee0af81e0aeaee0af8d1

கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்­கின்­றன. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் உறுப்­பி­னர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கட­தா­சி­களை வாபஸ் பெறப்போவதாக அறி­வித்­துள்­ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கி­ர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பதவியை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்­டுக்­கொ­டுப்­ப­தாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
03

அமைச்சுப் பொறுப்­புக்­களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இருத­ரப்­பு­களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரி­வித்தார். இந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட் 9ஆம் திகதி கிழக்கு மாகாண அமைச்­சுக்கள் அனைத்தையும் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்­சர்கள் தங்­களது உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கடந்த வௌ்ளிக்கி­ழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஆரியவதி கல­ப­தியும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஐ.மன்சூரும் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னி­லையில் பதவியேற்றனர். இதை­ய­டுத்து, கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் உச்ச கட்­டத்தை அடைந்துள்ளன.

கிழக்கு மாகா­ணத்தில் கல்வி அமைச்சு உட்பட இரண்டு அமைச்சுக்­களை எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, கல்வி அமைச்சு ஆரி­ய­வதி கலபதிக்கு வழங்­கப்­பட்­ட­தை­ய­டு்த்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்­ப­தில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இதே­வேளை, முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளி­யா­கி­ய­போதும், கடந்த வௌ்ளிக்கிழமை இரு அமைச்­சர்கள் பத­வி­யேற்ற வைபவத்திற்குக் கூட தமக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என விமலவீர திசா­நா­யக்க தெரி­வித்தார். இந்த நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்­பி­னர்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆத­ரவு தெரி­வித்து வழங்கிய சத்தியக் கடதாசியை நாளை திங்­கட்­கி­ழமை வாபஸ் பெறப்போவதாகவும் கிழக்கு மாகாண சபை ஐ.ம.சு. முன்­னணி உறுப்பினர் விமலவீர திசா­நா­யக்க தெரி­வித்தார். மேலும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆத­ரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் விலக்­கிக்­கொள்ள தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ரு­மான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்­துள்ளார். கிழக்கு மாகாண சபையின் நிலை தொடர்பில் அம்பா­றையில் வெள்­ளிக்கிழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியைச் சேர்ந்த நாங்கள் ஓர் உடன்­பாட்டின் அடிப்­ப­டை­யிலேயே மு.கா.வைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரு­வ­தற்கு சட்டபூர்வ­மான ஆதரவை வழங்­கி­யி­ருந்தோம். கிழக்கு மாகாணத்திற்கான முத­ல­மைச்­சரை பெற்­றதன் பின்னர் மு.கா. உடன்­பாட்­டினை மீறி செயற்பட்டு வருகின்றது.

இதனால் தங்களால் வழங்­கப்­பட்ட சட்டரீதியான ஆதரவை மீளப்­பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை மு.கா. ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மு.காங்­கி­ர­ஸூக்கு முதலமைச்சுப் பதவிக்கான அங்­கீ­காரம் ஒன்றினையே வழங்கினோம். அதை தவிர, ஏனைய அமைச்சுப் பதவிகள் பங்கீடு மற்றும் தேசிய அர­சாங்கம் பற்றி எதுவும் எம்மிடம் கலந்­தா­லோ­சிக்கவில்லை. மு.கா.வின் முன்­னுக்­குப்பின் முரனான செயற்பாட்டின் காரணமாக இன்று கிழக்கு மாகாண சபையின் நிலை குறித்து மக்கள் குழம்பியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சபையின் ஸ்திரமான நிலையும் குழம்பியுள்ளது. மு.கா. நல்லெண்ணெத்தை வெளிக்காட்டுவதாகவும், நல்லாட்சி ஏற்படுத்துவதாகவும், தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப் போவதாகவும் கூறி ஆதரவு வழங்கிய எம்மை அவமதிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.-

SHARE