வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் புதையல் தோண்டிய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண பொலிஸ் உயரதிகாரி ஒருவரை கைது செய்யும்படி சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் புதையில் தோண்டிய குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, குடாகச்சுகொட்டிய குளத்துக்கு அருகில் ஒரு குழுவினர் புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் அதிகாரி குழுவினர், சந்தேகநபர்களை கைது செய்ய சென்றபோது, அங்கு வந்த குறித்த பொலிஸ் அதிகாரி அவர்களை கைது செய்யவதை தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை கைது செய்யாத சம்பவம் தொடர்பில் காவல் மா அதிபர் என்.கே இலங்ககோனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பில், தற்போது கிழக்கு மாகாண பிரதி காவல் மா அதிபர் யூ.கே திசாநாயக்கவினை கைது செய்யக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிருந்து வெளியாகியுள்ள இவர், தற்போது தலைமறைவாகவிருப்பதாக தெரியவந்துள்ளது.