குடாநாட்டில் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்!

299

தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசிய கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் இன்று திங்கட்கிழமை யாழ்.குடாநாட்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட அரச அதபர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டதரனி ஸ்ரீநிஹால் உட்பட வட மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா, உறுப்பினர் பா.கஜதீபன் வட மாகாண ஆளுநரின் செயாளர் எல.இளங்கோவன் மற்றும் யாழ்.மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள் யாழ்.மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் இராணுவ பொலிஸ் கடற்படைகளின் அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டார்கள். கோட்டைப் பகுதியைச் சுற்றிக் காணப்படும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பிளாஸ்ரிக் பொருள்கள் உட்பட தேவையற்ற முறையில் கடலிலும் கரையிலும் வீசப்பட்டு இருந்த பொருள்கள் அகற்றப்பட்டதுடன் தொடர்ந்தும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வல்வையில்… சர்வதேச கடற்கரை தூய்மையாக்கும் தினத்தை முன்னிட்டு கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொதுமக்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வடமராட்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோர் கடற்கரை தூய்மையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

SHARE