குடும்பத்தோடு அழிப்பேன் ! அஸாத் சாலியை அச்சுறுத்திய மஹிந்த !

351

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரை குடும்பத்துடன் அழிக்க போவதாக அன்றைய அரசாங்க தரப்பின் உயர்மட்டம் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Government-was-killed-koslanda-tamils-Asath-Sali

சம்பந்தப்பட்ட முஸ்லிம் தலைவரை தொடர்பு கொண்ட அன்றைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த ஒருவர்.
டேய் சோனி.. நீ. அண்மைய காலமாக தேவையான விடயத்திலும் தேவையற்ற விடயத்திலும் தலையிடுகிறாய்.

எங்களை ஆணுமற்ற பெண்ணுமற்ற நபர்கள் என்று எண்ண வேண்டாம். நான் உனக்கு 500 மில்லியன் ரூபாவை தயார் செய்து வைத்திருக்கிறேன். வந்து அதனை வாங்கி செல். ஆனால், மீண்டும் வாய் திறந்தால், உன்னை ஜனவரி 9 ஆம் திகதி குடும்பத்துடன் கொலை செய்வேன். நான் சொல்வதை செய்யும் மனிதன் என மிரட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தலைவர் கடந்த டிசம்பர் மாதத்தில் இவ்வாறு மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினரும் பிரபல முஸ்லிம் அரசியல்வாதியுமான அசாத் சாலியே மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த அசாத் சாலி, லண்டனில் வசித்து வரும் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் சிலரை சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அசாத் சாலி,

தற்போது 500 மில்லியனை வைத்துகொள். போதவில்லை என்றால், பசிலை சந்தித்து ஓரிரு ஒப்பந்தங்களை போட்டுக்கொள். நான் பசிலிடம் தகவலை கூறுகிறேன். நீ, எங்களுடன் அந்நியோன்யமாக இருந்தால், உனக்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும்.

நாங்கள் தனித்து செல்லும் நபர்கள் அல்ல. எங்களுடன் இருப்பவர்களை நாங்கள் நன்றாக உபசரிப்போம். அதேபோல் எங்களுடன் மோதினால், அவர்களை முடித்து விட்டே வேறு வேலையை பார்ப்போம். நன்றாக நினைவில் வைத்துகொள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாக அசாத் சாலி கூறியுள்ளார்.

– See more at: http://www.jvpnews.com/srilanka/101535.html#sthash.jmfApD6Y.dpuf

SHARE