குரங்கம்மை வைரஸின் பெயர் மாற்றம்

20

குரங்கம்மை வைரஸின் பெயரை ‘எம்பொக்ஸ்’ (MPOX) என மாற்றுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தினால் இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மையின் (மங்கி பொக்ஸ்) பெயர் மாற்றம் தொடர்பில் கடந்த காலங்களில், அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.

மங்கி பொக்ஸ் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

SHARE