குறைந்த விலையுடைய Nexus சாதன உற்பத்தியில் கூகுள்

819
கூகுள் நிறுவனம் குறைந்த விலையுடைய Nexus சாதனத்தை உற்பத்தி செய்து இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.பல்வேறு திட்டங்களை தற்போது கூகுள் நிறுவனம் மிகவும் இரகசியமான முறையிலேயே மேற்கொண்டு வருகின்றது. இதானால் அவை தொடர்பான எந்த அறிவிப்பினையும் உத்தியோகபூர்வமாக வெளியிடாது இருக்கும் அந்நிறுவனம், குறித்த திட்டங்களை அறிமுகப்படுத்தும் காலப்பகுதியிலேயே உத்தியோபூர்வ அறிவிப்பினை வெளியிடுகின்றது.

அதேபோலவே MediaTek Processor இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும் இப்புதிய Nexus சாதன உற்பத்தியும் ரகசியமாக பேணியுள்ளது.

எனினும் சில தகவல்கள் கசிந்துள்ளன. அவற்றில் அன்ரோயிட் சாதனங்களில் இயங்கும் இச்சாதனங்களின் விலையானது 100 டொலர்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE