குற்றம் புரிந்த ஞானதேரா் வெளியே சமதானத்தை போதித்த விஜித்ததேர் உள்ளே

474

dd

வட்டரக்க விஜித தேரர் “தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார்” கொடுத்தார் என்கிறது போலிஸ்

கடும் போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மிதவாத பௌத்த அமைப்பாகக் கருதப்படும் , ஜாதிக பல சேனா என்ற அமைப்பின் பொதுச்செயலாளரான, வட்டரக்க விஜித தேரர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டபோது போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

போலிசாரிடம் பொய்ப் புகார் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டியே இந்த பிக்கு கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன கூறினார்.

தன்னை சிலர் கடத்திச் சென்று தாக்கியதாக விஜித தேரர் முன்பு பொலிசாரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்தார்.

வட்டரக்க விஜித தேர்ர் பானதுறை என்ற இடத்தில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் காணப்பட்டிருந்தார். அவரைத் தாக்கியவர்கள் அவருக்கு சுன்னத் என்ற ஆண் உறுப்பின் முன் தோல் அறுவை சிகிச்சையை பலவந்தமாகச் செய்ததாக அவரது வழக்கறிஞர் பிபிசிக்கு தெரிவித்திருந்தார்.

ஆயினும் அவரின் உடம்பில் காணப்பட்ட காயங்களை பரிசோதித்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி இந்த காயங்கள் சம்பந்தப்பட்ட தேரரினாலேயே ஏற்படுத்தப்பட்டவை என தீர்மானித்துள்ளார்.

இதன்படி போலிசாருக்கு பொய்யான தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டியே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விஜித தேரரை விசாரணைகள் முடிவடைந்த பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

SHARE