குழந்தையை கொன்றுவிட்டு இப்படியா பேசுவார் ஹேமமாலினி

182

கடந்த வாரம் அனைவரையும் திடுக்கிடச் செய்த விஷயம் ஹேமமாலினியின் கார் விபத்து தான். ஹேமமாலினி வந்த கார் எதிரே வந்த கார் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே ஹேமமாலினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு காரில் பயணித்தவர்களில் சோனம் (4) என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து சமீபத்தில் அக்குழந்தையின் தந்தை, விபத்து நடந்த இடத்திற்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் நடிகை ஹேமாமாலினியை மீட்பதில் தான் கவனம் செலுத்தினர். என் மகளையும் அவருடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவள் பிழைத்திருப்பாள் என கூறியிருந்தார்.

இதனால் ஹேமமாலினியை பலர் தாக்க, தற்போது டுவிட்டரில் ஹேமமாலினி பதில் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை, டிராபிக் ரூல்சை மதித்து வாகனம் ஓட்டியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி செய்திருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE