குஷியில் குதிக்கும் சானியா மிர்சா

426

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது. சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றார்.

இதுபற்றி சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில், ஆசிய போட்டியில் டென்னிஸில் 5 பதக்கங்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தருணத்தில் எனது டென்னிஸ் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் நன்றாக செல்கிறது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி குறித்து நான் இப்போது சிந்திக்கவில்லை.

அடுத்த 2 வாரத்தில் தொடங்க இருக்கும் சிங்கப்பூர் ஓபன் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

SHARE