கூகுள் கணக்குகளை நீக்க முடிவு

265
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளை அங்கீகரிக்காமல் அணுகுவதை தடுப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கணக்குகளை அகற்றினால் Gmail, Docs, Drive, Meet, Calendar, Youtube மற்றும் Google உள்ளிட்ட அனைத்து Google Workspace உள்ளடக்கமும் அகற்றப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
SHARE