கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

52

கம்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இணையத்திற்கு கூகுள் குரோம் பிரவுஸரையே உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், இந்த கூகுள் குரோம் பயன்படுத்துவதில் பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதாக கணினி வல்லுநர்கள் குழு முக்கிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு (CERT-In) சமீபத்தில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கூகுள் குரோம் பயன்படுத்துவோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பிரவுஸரின் பதிவுகளில் பல பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோம் வழியாக நமது சிஸ்டத்தை ஈஸியாக ஒருவர் ஹேக் செய்ய முடியும். இதன் மூலம் நமது தனிப்பட்ட தரவுகளும் பறிபோகும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் மட்டுமல்லாது லினக்ஸ் மற்றும் ஆப்பிள் கம்யூட்டர்களிலும் கூட இந்த ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க குரோம் பிரவுஸரின் புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பிரச்சினைகளைக் களைந்து கூகுள் புதிய க்ரோம் அப்டேட்டை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாம் செல்லும் இணையதளங்கள் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி, சமூக வலைத்தளம் என எதுவாக இருந்தாலும் மிகவும் வலிமையான பாஸ்வேர்ட்களை பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் கணக்குகளுக்கு two-factor authentication-ஐ எப்போதும் ஆனில் வைத்திருக்க வேண்டும். கணினியை முழுமையாக அப்டேட் செய்து வைத்திருப்பதும், நல்ல ஆண்டி வைரஸ் பயன்படுத்துவதும் எப்போதும் இணைய தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உதவி செய்யும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
SHARE