தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இணைப் பொதுச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்மேன் க்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – பௌத்தலோகா மாவத்தையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று 9.30 அளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றள்ளது.
இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், கடந்த கால அரசியல் நிலவரங்கள், அரசியல் யாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.