கூட்டரசாங்கத்தில் இணைய போவதில்லை: மக்கள் விடுதலை முன்னணி

153
தேர்தலுக்கு பின்னர் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு கூட்டரசாங்கத்தில் இணைய போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தை பெற முடியாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி தனது கடமையை நிறைவேற்றும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற முறைமைக்கு அமைய வலுவான எதிர்க்கட்சி இருந்தால், மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியின் பங்க ஆற்றும் பலத்தை மக்கள் வழங்குவார்கள் எனவும் அந்த கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியில் இணையாது, இந்த இரு கட்சிகளும் காலம் கடந்து போன கட்சிகள் எனவும் மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

SHARE