கென்யாவில் குவாரி ஒன்றில் பணிபுரியும் கிறிஸ்துவ தொழிலாளர்கள் 36 பேர் தீவிரவாதிகளில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

397

 

கென்யாவில் குவாரி ஒன்றில் பணிபுரியும் கிறிஸ்துவ தொழிலாளர்கள் 36 பேர் தீவிரவாதிகளில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கென்யாவின் மேன்டிரா கவுண்டியில் இருந்து 10 மைல் தொலைவில் குவாரி உள்ளது.

இந்த குவாரியில் பணியாற்றிய கிறிஸ்துவ தொழிலாளர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள கூடாரத்தில் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மமனிதன் நள்ளிரவில் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார்.

தொழிலாளர்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களைத் தனிமைப்படுத்திய தீவிரவாதிகள், அவர்களில் சிலரது தலையைத் துண்டித்தும், எஞ்சியவர்களின் தலையில் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் மொத்தம் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை மேன்டிரா கவுண்டியின் கவர்னர் அலி ரோபா உறுதி செய்துள்ளார்.

கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சோமாலியாவுக்கு அருகிலுள்ள மண்டேரா நகரில், அல்-கொய்தாவோடு தொடர்புடைய ஷெபாப் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

 kenya_attack_004

SHARE