கெவின் பீட்டர்சன் முச்சதம்! இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு

392
கவுண்டி கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியதன் மூலம் கெவின் பீட்டர்சனை இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 மாதங்களாக இங்கிலாந்து தேசிய அணிக்காக தேர்வு செய்யப்படாமல் இருக்கும் கெவின் பீட்டர்சன், தற்போது சர்ரே கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்.

லேசெஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 326 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் பற்றிய ஊடக சந்திப்பு இன்று நடைபெறவிருக்கும் நிலையில் இச்சாதனையை செய்துள்ளார்.

இந்த முச்சதம் மூலம் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE