கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

15

 

மூதூரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்றையதினம் (01-04-2024) முற்பகல் மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டுள்ளது.இதனால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE