கொட்டதெனியாவ சிறுமி கொலை – சந்தேக நபரான மாணவனின் மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள்

276

கொட்டதெனியாவ சேயா சதேவ்மி சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் மடிக்கணினி தொடர்பில் காவற்துறையினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவை கொழும்பு பல்கலைகழக கணனி பிரிவிற்கு அனுப்பபட்டு அறிக்கை பெற்று கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை நடப்பு ஊடக பேச்சாளர் ப்ரியன்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.கொட்டதெனியாவ சிறுமி கொலை சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை மாணவனுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, சந்தேகத்துக்குரிய இரண்டு பேரையும் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த காவற்துறையினர் தயாராகின்றனர்.

இதற்கிடையில் சேயா சதேவ்மி சிறுமி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனை நடைமுறைப்படுத்துமாறும் கோரி நேற்று நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன் எடுக்கப்பட்டன.

நீர்கொழும்பு, ஆடிஅம்பலம, குளியாபிட்டிய, முத்துவாடிய, ஏக்கல, படல்கொட, சூரியவெவ, வட்டவளை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன.

2221-kotatheniya-

SHARE