கொட்டிலில் செயல்பட்ட பாடசாலை முழு வடிவம் பெற்றது. டாக்டர் சி. சிவமோகன் பெருமிதம்.

164

கற்சிலைமடு பாடசாலை பல வருடங்களாக கட்டிட வசதிகள் அற்று செயல்பட்டு வந்தது. இன்று ஒரு முழுமையான வடிவம் பெற்ற பாடசாலையாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்.

திரு. சி. நாகேந்திரராசா தலைமையில் 11.06.2015 அன்று நடைபெற்ற மேற்படி 2015 ம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான மதியபோசன விருந்தில் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

48

45 46 47

மேற்படி நிகழவிற்கு விசேட விருந்தினராக துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளர் மாலினி வெனிற்றன் மற்றும் கௌரவ விருந்தினராக ஒட்டுசுட்டான் கோட்டக் கல்வி அதிகாரி
ரி. பங்கய செல்வன்இ கற்சிலைமடு கிராம சேவையாளர் சுகந்தினி நீலகண்டன்இ கற்சிலைமடு ஆயுர்வேத வைத்தியர்
என். வன்னியசிங்கம்இ பனை அபிவிருத்தி சங்க பொது முகாமையாளர் வி. உதயசந்திரன்இ பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர்
என். விஜயமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதில் பங்கு கொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தான் 1982 ம் ஆண்டு ஒரு அரசாங்க ஆசிரியராக ஒரு வருடம் மேற்படி பாடசாலையில் கல்வி கற்பித்ததாகவும் அன்றைய கால கஷடங்களையும் தெரிவித்து உரையாற்றினார்.

இன்று மேற்படி பாடசாலை முப்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றது பின்தங்கிய மக்களின் ஊக்கத்தில் தங்கியுள்ளது. இப்படியாக உள்ள பிரதேசங்களில் பாடசாலை அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது. அதன்மூலமாகவே எமது கிராம மக்களை முன்நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாடசாலை அதிபர்
திரு. சி. நாகேந்திரராசா அவர்கள் கற்சிலைமடு பாடசாலையில் ஆசிரியராக இருந்து தனது உயர்தர கல்வியை சொந்தமாக கற்று வைத்திய கலாநிதியாக சேவைபெற்று இன்று ஒரு மாகாண சபை உறுப்பினராக உள்ளார் எனின் அது இந்த மாணவர்களுக்கான உந்துதலுக்கான விசையாக இருக்கும் என கருத்துக் கூறினார்.

SHARE